• Apr 20 2024

'சீதா ராம்' இயக்குநரோடு இணையும் சூர்யா.. பலத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் சூர்யா. அவரது நடிப்பில் தற்போது 'சூர்யா 42' என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா பல்வேறு கெட் அப்களில் நடித்து வருவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


மேலும் தற்காலிகமாக 'சூர்யா 42' என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது இப்படம் 3d தொழில்நுட்பத்தில், பெரும் பொருட்செலவில் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்படத்தினைத் தொடர்ந்து சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் 'வாடிவாசல்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார்


இந்நிலையில் சூர்யா குறித்த மற்றோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது பான் இந்தியா படமாக உருவான 'சீதா ராம்' திரைப்படம் ஆனது கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் உட்படப் பல பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர்.


இந்நிலையில் சீதா ராம் படத்தின் இயக்குநரான ஹனு ராகவப்புடி இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சூர்யா முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க போவதாகக் கூறப்படுகின்றது. மேலும் இப்படமும் பான் இந்தியா படமாக உருவாகுவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புஇதுவரை வெளி வரவில்லை. எது எவ்வாறாயினும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement