• Apr 01 2023

‘சூர்யா 42’ ஷூட்டிங்கில் அசால்ட்டாக நடித்து வருகிறாராம்'...நடிகை திஷா பதானி .!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் பிரபல ஹாட் நடிகை திஷா பதானி ஏற்கனவே, பல சுவாரஸ்யமான படங்களை கையில் வைத்திருக்கிறார். 

தற்போது, அவர் சூர்யாவுடன் ‘சூர்யா 42’ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். நடிகை திஷா பதானி படப்பிடிப்புக்காக சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

பலவிதமான வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்த நடிகை விரைவில், சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யாவுடன் தனது முதல் தமிழ் படத்தில் அறிமுகமாகவுள்ளார். 

இதனால், இந்த பாலிவுட் ஹாட் நடிகை விரைவில்  கோலிவுட் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

சமீபத்தில் இதைப் பற்றி அவர் பேசுகையில், சூர்யா மற்றும்  ஏனைய படக்குழுவினருடன் தனது படப்பிடிப்பின் இரண்டாவது ஷெட்யூலை சிரமமின்றி கூச்சமில்லாமல் அசால்ட்டாக படமாக்கி வருவதாக தெரிவித்தார்.

அனைவரும் தன்னுடன் சகஜமாக பழகுவதால் தனக்கு ஈசியாக இருக்கிறது என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement