• Sep 27 2022

சாக்லேட் பாய் ஆர்யாவுக்கு கேப்டன் ஜெர்சியை வழங்கி கௌரவித்த சூர்யா-இது என்னங்க இப்படி கொஞ்சிக்கிறாங்க?

Listen News!
stella / 1 month ago
image
Listen News!

சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தை அடுத்து டாஃப் நடிகராக மாறியுள்ளவர் தான் நடிகர் ஆர்யா. இவர் தற்பொழுது 'கேப்டன்' என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.

இப்படம் செப்டம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கின்றது. இதுவும் 'டெடி' படம் போல, ரொம்ப வித்தியாசமான ஜானரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் சூர்யாவுடன், ஆர்யா இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலானது. இந்தப் போட்டோவில் சூர்யாவிடம் இருந்து ஆர்யா 'கேப்டன்' என பிரிண்ட் செய்யப்பட்டுள்ள ஒரு ஜெர்சியை வாங்குகிறார். ஆர்யாவுடன் மேலும் சிலரும் இந்தப் புகைப்படங்களில் உள்ளனர்.

ஆர்யா நடிப்பது மட்டும் இல்லாமல், சைக்கிளிங் செல்வதிலும் கெட்டிக்காரர். சென்னையில் அதிகாலை 4 மணியளவில் ஆர்யா தனது குழுவினருடன் சைக்கிளிங் செல்வதை பார்க்க முடியும். அதுமட்டும் இல்லாமல், ஆர்யா பல சர்வதேச சைக்கிள் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், லண்டனில் நடைபெறும் சைக்கிள் போட்டியிலும், ஆர்யா தனது குழுவினருடன் கலந்துகொள்கிறார். இதற்கான ஜெர்சியை தான் சூர்யா ஆர்யாவுக்கு வழங்கியதாகத் தெரிகிறது.

இதையடுத்து இந்த ஜெர்ஸி புகைப்படங்களை டிவீட்டரில் ஷேர் செய்துள்ள ஆர்யா, சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பதிலுக்கு சூர்யாவும் ஆர்யாவுக்கும் அவரின் குழுவுக்கும், போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

TAGS
Thank you for voting! 0 votes
0%
0%
0%
0%
0%
0%