• Apr 18 2024

சூரியின் ஹோட்டலில் தினமும் ரூ. 25,000 நஷ்டம்-நேரில் ஆஜராகி அவர்கள் கொடுத்த விளக்கம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மதுரை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மன் ஹோட்டலை நடத்துவதால் தினமும் ரூ. 25,000 வரை நஷ்டம்  என சூரி தரப்பில் இருந்து விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு என்னும் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அடையாளம் காணப்பட்டவர் தான் சூரி. இவர் அஜித், ரஜினி ,விஜய் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இது தவிர கதாநாயகனாக விடுதலை என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். 

இந்நிலையில் நடிகர் சூரி மதுரையில் நடத்தி வரும் அம்மன் உணவங்களில் ரெய்டு நடைபெற்றது. இதன் பின்னர் மூன்று நாட்களில் அம்மன் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதோடு, விடுபட்ட ஆவணங்களையும் காட்டவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர்.



எனினும்  சூரி தரப்பில் உணவகம் குறித்து பேசியிருக்கிறார். அவர் இந்த உணவங்களின் நடிகர் சூரி செய்து வரும் நல்ல விஷயங்கள் பலவற்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதாவது மதுரை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மன் ஹோட்டலை நடத்துவதால் தினமும் ரூ. 25,000 வரை நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்து இருக்கிறார். ஆனாலும் அங்கு மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார்கள்.


Advertisement

Advertisement

Advertisement