• Apr 18 2024

சூரி நடிப்பில் உருவான விடுதலை படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு- செம குஷியான ரசிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விடுதலை.  இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர்.

 மேலும் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது.


இந்நிலையில் படத்தின் முதல் பாகம் வரும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சூரி ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

மேலும் சூரி கதாநாயகனாக நடித்தாலும் காமெடியனாகவும் நடிப்பேன் என அண்மையில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நப்பில் வெளியான பிரின்ஸ் படத்தில் இறுதியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement