• May 29 2023

கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற சூப்பர் ஸ்டார் மருமகன்..! அதிச்சிக்குள்ளான திரையுலகம்..!

Jo / 4 weeks ago

Advertisement

Listen News!

பாலிவுட் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் அமீர் கான்.அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லால் சிங் சந்தா திரைப்படம் பாய்காட் பிரச்சினையால் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், அமீர் கானின் மருமகனும் பாலிவுட் நடிகருமான இம்ரான் கானும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக சொல்லப்படுகிறது.

தற்கொலைக்கு முயன்ற சூப்பர் ஸ்டார் மருமகன்:இந்தி திரையுலகில் 30 ஆண்டுகளாக கொடிக் கட்டி பறந்து வருகிறார் அமீர்கான். 

தற்போது  நடிப்பில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியுள்ள அவர், பட தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், லால் சிங் சந்தா படத்தின் தோல்வியால் கடனில் சிக்கித் தவிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அவரது மருமகனும் பிரபல பாலிவுட் நடிகருமான இம்ரான் கானும் பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளாராம். குழந்தை நட்சத்திரமாக இரண்டு படங்களில் நடித்துள்ள இம்ரான் கான், ஜானே தூ... யா ஜானே நா திரைப்படம் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். மருமகனுக்காக அமீர்கானே தயாரித்த இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

ஜானே தூ... யா ஜானே நா படத்தில் பாய்ஸ் நாயகி ஜெனிலியா இம்ரான்கான் ஜோடியாக நடித்திருந்தார். ஓரளவு வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இம்ரான் கானுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்தது. அடுத்தடுத்து கிட்னாப், லக், ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், டெல்ஹி பெல்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இம்ரான் கான் நடிப்பில் கட்டி பட்டி என்ற திரைப்படம் 2015ம் ஆண்டு வெளியானது.

அதன்பிறகு பட வாய்ப்புகளே இல்லாமல் வீட்டில் முடங்கிவிட்டார் இம்ரான் கான். மேலும், அவந்திகா மாலிக் என்பவரை திருமணம் செய்திருந்த இம்ரான்கான், 2019ம் ஆண்டு அவரையும் பிரிந்தார். பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், மனைவியையும் பிரிந்ததால் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளாராம் இம்ரான் கான்.

அதுமட்டும் இல்லாமல் இம்ரான் கானுக்கு கடன் பிரச்சினையும் அதிகமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மொத்தமாக வீட்டிலேயே முடங்கிவிட்ட இம்ரான் கான், தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாரையும் சந்திக்காமல் தனிமையிலும் இருந்து வருகிறாராம். திறமையான நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இம்ரான் கானின் தற்போதைய நிலை பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement