கொரோனா நிதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐம்பது லட்சம் ருபாவை வழங்கியுள்ளார்-மகிழ்ச்சியில் மக்கள்.

66

சமீபகாலமாக இந்தியாவில் கொரோனாத் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் ஒவ்வொருநாளும் லட்சக்கணக்கானோர் பாதிப்புக்குள்ளாவதோடு பொதுமக்கள் அரசியல்வாதிகள் திரையுலக நட்சத்திரங்கள் எனப் பலரும் இறப்புக்குள்ளாகி வருகின்றமையும் தெரிந்ததே.

மேலும் இந்த தொற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்காக இந்தியஅரசுபல்வேறுநடவடிக்கைகளைமேற்கொண்டுவருகின்றது.இதனால்தொற்று சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கினார்கள்.இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 25 லட்சம் ரூபாயை முதலமைச்சரிடம் வழங்கினார். நடிகர் அஜித் ஆன்லைன் மூலம் ரூபாய் 25 லட்சம் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் நடிகர் சிவர்கார்த்திகேயன் நேரில் சென்று, ரூ. 25 லட்சம் வழங்கினார். இயக்குனர் சங்கர் ரூ. 10 லட்சம் வழங்கினார்.இந்நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: