• Nov 29 2022

மறைந்த புனித் ராஜ்குமார் மனைவிக்கு விருது வழங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Listen News!
lathushan / 3 weeks ago
image
Listen News!

இரசினிகாந் என்பவர் தமிழ் நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 


மேலும் இவருடைய நேயர்கள் இவரை தலைவர் என்றும் "சூப்பர் ஸ்டார்" என்றும் அழைக்கிறார்கள். மேலும் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த சிவாசி படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார். 


ஆசியாவிலேயே அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆனார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் நேற்று திடீரென ரஜினி தனி விமானத்தில் பெங்களுருவிற்கு சென்று விருது விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். 


இந்நிலையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் மனைவிக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கியுள்ளனர். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியும் விருதை வழங்கி கௌரவத்திருக்கிறார்.