• Dec 05 2022

துணிவு படக்குழுவினரிடம் உதயநிதி கேட்ட சூப்பர் அப்டேட்- சஸ்பெஸ்ன் தாங்க முடியாமல் இருக்கும் ரசிகர்கள்

Listen News!
stella / 3 weeks ago
image
Listen News!


இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் துணிவு.மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகிய இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.

மேலும் இப்படத்தின் போஸ்டர் இண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இருப்பினும் இதனைத் தொடர்ந்து எந்தத் தகவலும் வெளியாகாததால் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வருகின்றனர்.


அதன்படி துணிவு திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக வெளியிட இருக்கிறார்.

மேலும் சமீபத்தில் துணிவு திரைப்படம் குறித்து பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் வலிமை படம் போல இதிலும் பைக் ரேஸ் எல்லாம் உண்டா என துணிவு படக்குழுவிடம் அவர் கேட்பதற்கு இருப்பதாக அவர்கள் சொன்னதாக உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.இதனால் ரசிகர்களும் இது குறித்த அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.