அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் துணிவு. இப்படத்தினை எச்.வினோத் இயக்கியுள்ளதோடு போனிகபூர் தயாரித்துள்ளார்.இவர்கள் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் ஆகும். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மேஞ்சுவாரியார் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் வீரா, பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி, சிபி ஆகியோரும் நடித்துள்ளனர். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் ஷுட்டிங் முடிவடைந்து தற்பொழுது ரிலீஸிற்கு தயாராகி வருகின்றது. இப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளது. அதுமட்டுமின்றி விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் துணிவு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இதுவரை துணிவு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில், இன்று மாலை அதுகுறித்த அறிவிப்பை படக்குழு சர்ப்ரைஸாக வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று மாலை துணிவு படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட உள்ளது. இதனால் அஜித் ரசிகர்களுக்கு இன்று செம்ம ட்ரீட் காத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!