• Apr 19 2024

சமந்தாவின் சகுந்தலம் படத்திலிருந்து இன்றைய தினம் வெளியாகவுள்ள சூப்பர் அப்டேட்- வேற லெவலில் இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சகுந்தலம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 

இந்நிலையில், சகுந்தலம் படத்தின் முதல் பாடலான 'மல்லிகா' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் அந்த பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

 இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சகுந்தலம் திரைப்படம் பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement