• Apr 24 2024

நடிகை நயன்தாராவின் கனெக்ட் படம் பற்றி வெளியான சூப்பர் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது "கனெக்ட்" என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை பிரபல  இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். இதில் சத்தியராஜ், அனுபம் கேர், வினய் போன்ற முக்கிய நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர் தயாரித்துள்ளது .

அத்தோடு ஹாரர் சஸ்பென்ஸ் த்ரில்லர் என உருவாகியுள்ள இப்படத்தின் ரன் டைம் 95 நிமிடம் ஆகும், மேலும் இப்படத்தில் இடைவேளை இல்லை. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது கனெக்ட் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் 9ஆம் தேதி அன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகுமென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கனெக்ட் படம் வருகிற டிசம்பர் 22 தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கு முன்பு நயன்தாரா நடித்து வெளியான ஹாரர் படமான "மாயா" மக்களால் கொண்டாடப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement