• Apr 25 2024

நயன்தாராவின் பிறந்தநாளிற்க்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்- விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

நயன்தாரா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.


அதுமட்டுமல்லாமல் நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.மேலும் இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.


இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.


மேலும் கடந்த சில மாதங்களாக நயன்தாரா குறித்து சொந்த விஷயங்கள் பற்றி தான் செய்திகள் வந்துகொண்டிருந்தன. திருமணம், உடனே திருப்பதி கோவில் சர்ச்சை பின் சர்ரோகஸி மூலம் குழந்தை பெற்றது என இப்படியே பரபரப்பான சில விஷயங்கள் வந்தன.


தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ஒன்று வெளியாக இருப்பதாக டுவிட் செய்துள்ளார். வரும் நவம்பர் 18 நடிகை நயன்தாராவின் பிறந்தநாள், அன்று ஸ்பெஷலாக அவர் நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement