தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக திழ்பவர்கள் தான் நடிகர் அஜித் மற்றும் விஜய்.
இவ்வாறுஇருக்கையில் விஜய்யின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் இசையமைப்பாளர் இசையமைத்து இருக்கிறார். அத்தோடு தீபாவளி முன் தினம் வரை இப்படத்தின் வேலைகள் இருந்ததால் முதல் பாடல் வெளியாகவில்லை.
அத்தோடு இப்படத்தில் விஜய் பாடியவுள்ள அந்த அசத்தலான பாடல் நவம்பர் முதல் வாரத்தில் வரலாம் என கூறப்படுகின்றது.
துணிவு திரைப்படத்தில் ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். அனிருத் இப்படத்தில் பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தாராம். மேலும் இது குறித்து அஜித்திடம் கேட்டதற்கு ‘மியூசிக்கைப் பொறுத்தவரை உங்களுக்கு என்ன விருப்பமோ அதைப் பண்ணுங்க’என சொல்லியுள்ளார்.
துணிவு படத்திற்காக அனிருத் பாடியுள்ள பாடலும் நவம்பர் முதல் வாரத்தில் வர இருக்கிறது. இதனால் நவம்பர் முதல் வாரத்திலே விஜய்- அஜித் ஒன்றாக வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!