• Mar 29 2024

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்திலிருந்து வெளியாகிய சூப்பர் ஹிட் அப்டேட்- அடடே வேற லெவில் இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!


 ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் தான் ருத்ரன்.இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர்,கதாநாயகியாக நடித்து வருகின்றார்.இப்படத்தினை பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கியுள்ளார்.

திரைக்கதை எழுத்தாளர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக சரத்குமார் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்த படத்தில் கிளாசிக் படமான 'வீரத்திருமகன்' படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை  ரீமிக்ஸ் செய்துள்ளனர். ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு நடந்தது. இப்பாடலுக்கு நடன இயக்குநராக மாஸ்டர் ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்.

ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த சண்டைக் காட்சி படப்பிடிப்புடன் ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பொள்ளாச்சி & சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று  (14.04.2023) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement