• Nov 29 2022

வெள்ளித்திரையில் நாயகியாகும் சன்டிவியின் சீரியல் நடிகை- இதனால் தான் சீரியலில் இருந்து விலகினாரா?

Listen News!
stella / 6 days ago
image
Listen News!


2018-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ராஜா லவ்ஸ் ராஜா என்ற படத்தின் மூலம் திரைத்துரையில் அறிமுகமானவர் தான் ராதிகா ப்ரீத்தி. இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புக்கள் கிடைக்காததால் சன்டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் பூவரியாக நடித்திருந்தார்.

இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்தார்.இருப்பினும் இவர் இந்த சீரியலில் இருந்து இடையிலேயே விலகிக் கொண்டார். சினிமாவில் நடிப்பதற்காக அவர் சீரியலில் இருந்து விலகியதாகக் கூறப்பட்டது.


இதனை அடுத்து மீண்டும் புதிய சீரியலில் கமிட்டாகி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்த சரியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 


இந்த நிலையில் தற்பொழுது விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.