அடையாளம் தெரியாமல் மாறிய சுந்தர்சி-இதோ புகைப்படம்..!

1725

தமிழ் சினிமாவில் பல பிரமாண்டமாகவும் சூப்பர் ஹிட்டாகவும் படங்களை இயக்கிய பல முன்னணி இயக்குனர்கள் இருக்கின்றனர். இவர்களில் அனைவராலும் அறியப்பட்ட பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் தான் சுந்தர்சி.

இவர் இயக்கத்தில் வெளியான வின்னர் ,கலகலப்பு ,அரண்மனை போன்ற இன்னும் பல திரைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.மேலும் இவர் படம் என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது என்பது ரசிகர்களின் பொதுவான கருத்து. கைப்புள்ள, கட்டத்துரை, வெடிமுத்து போன்ற பல நகைச்சுவை கதாபாத்திரத்தை வடிவமைத்த சிறப்பு இவரையே சாரும்.

இயக்குனராக மட்டுமல்லாமல் தலைநகரம் படத்தின் மூலம் ஹீரோகவும் அறிமுகமானார் சுந்தர் சி. சுராஜ் இயக்கிய அப்படம் வரவேற்பை பெற தொடர்ந்து சண்டை , ஆயுதம் செய்வோம், நகரம் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்து பட்டையை கிளப்பினார்.

எனினும் தற்போது ஒருபக்கம் ஹீரோவாகவும் மறுபக்கம் இயக்குனராகவும் கலக்கிக்கொண்டிருக்கும் சுந்தர் சி அடுத்ததாக தலைநகரம் 2 படத்தில் நடித்துவருகிறார். சுந்தர் சியை வைத்து இருட்டு படத்தை இயக்கிய துரை இப்படத்தை இயக்குகிறார். தற்போது இப்படத்தின் FIRSTLOOK வெளியாகியுள்ளது.

கறுப்பு கண்ணாடி , தாடி என படு மாஸாக இருக்கும் சுந்தர் சியின் இந்த லுக் தற்போது ரசிகர்களிடத்தே வைரலாவிவருகிறது. மேலும் அடுத்ததாக ஜீவா மற்றும் ஜெய்யை வைத்து சுந்தர் சி ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: