சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் கதாநாயகன் அப்பாவாகவுள்ளாராம்-குஷியில் ரசிகர்கள்

433

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டானவை. அந்த வகையில் இதில் செம சூப்பராக ஓடி முடிந்த சீரியல் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும்.

இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில், கதாநாயகனாக அறிமுகமானவர் வினோத் பாபு. இவர் இதற்கு முன் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.மேலும் தற்போது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ‘ தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் நடித்து வருகிறார் அதன் புரோமோ கூட வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் வினோத் பாபு விரைவில் அப்பாவாக இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது .அதாவது நடிகர் வினோத் பாபுவின் மனைவி கர்ப்பமாக இருக்கிறாராம்.

இதனை, நடிகர் வினோத் பாபு, தனது மனைவியுடன் இணைந்து புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.தற்போது பலரும், இந்த தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.