• Mar 29 2023

அம்மா பேசாமல் இருப்பதற்கு கார்த்திக் தான் காரணம் என்பதை அறிந்த சுந்தரி- எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் சுந்தரி சீரியல்

stella / 1 week ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. இதில் கார்த்திக் சுந்தரியின் அம்மாவிடம் சுந்தரிக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மையை சொன்னதால் அவர் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்ததோடு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார்.

அத்தோடு சுந்தரியின் அம்மாவுக்கு பேச்சு வராமல் போய் விட்டது. இருப்பினும் சுந்தரிக்கு தன்னுடைய அம்மாவுக்கு இப்படியானதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஹாஸ்பிட்டலுக்கு வந்தும் கார்த்திக் சுந்தரியின் அம்மாவைக் போய் பார்க்காதது சுந்தரிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.


இந்த நிலையில் கிருஷ்ணா தனது மனைவியிடம் சென்று சுந்தரியின் அம்மாவுக்கு இப்படியானதற்கு காரணம் கார்த்திக் தான் என்று கூற இதனை கேட்டுக் கொண்டிருந்த சுந்தரி அதிர்ச்சியடைகின்றார்.இதனால் உண்மை தெரிந்த சுந்தரி என்ன முடிவு எடுக்கப் போகின்றார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement