• Apr 19 2024

'பொன்னியின் செல்வன்' ஒரு தெலுங்குத் திரைப்படம்... கூறிய சுஹாஷினி... வெடித்த புதுச் சர்ச்சை... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் மணிரத்னம். இவரின் இயக்கத்திலும் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரின் நடிப்பிலும் தற்போது 'பொன்னியின் செல்வன்' என்ற பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் உருவாகியுள்ளது.


கல்கியினால் எழுத்தப்பட்ட 'பொன்னியின் செல்வன்' என்ற நாவலை மையமாக கொண்டே அதே பெயரில் இப்படமானது உருவாக்கப்பட்டுள்ளது.

மணிரத்னத்தின் கனவுப் படத்தினை தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இப்படமானது இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாக இருக்கிறது. 

மேலும் தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் இப்படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முன்பதிவின் மூலம் கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து முதல்நாளில் இப்படம் பெரிய அளவிலான வசூலை வாரிக் குவிக்கும் என சொல்லப்படுகிறது.


இந்நிலையில் தற்போது படக்குழுவினர் இணைந்து ப்ரோமோஷன் நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் நடிகை சுஹாசினி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே  ட்ரெண்டாகி வருகிறது. 


அதாவது பொன்னியின் செல்வன் படத்தின் உடைய ப்ரோமோஷன் நிகழ்வானது சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் மணிரத்னத்திற்கு பதிலாக அவரின் மனைவி சுஹாசினி கலந்து கொண்டுள்ளார். 


அந்நிகழ்வில் அவர் பேசிய ஒரு விடயம் தான் ரசிகர்களின் விமர்சனகளுக்கு உள்ளாகி இருக்கிறது. அதன்படி அவர் கூறுகையில் "பொன்னியின் செல்வன் உங்க திரைப்படம், நீங்கள் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும்.

இது உண்மையான தமிழ் கதை, ஆனால் படத்தின் ஷூட்டிங் ஆந்திரா மற்றும் தெலுங்கனாவில் நடந்தது. தமிழ்நாட்டில் 10 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடந்தது, மற்றபடி படம் முழுக்க முழுக்க ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் தான் நடந்தது. எனவே இது உங்க திரைப்படம்" என ரசிகர்களிடம் கூறியிருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் பலரும் "அப்படியாயின் இது தெலுங்குத் திரைப்படமா?" எனக்கேட்டு பலவிதமாக சுஹாசினியின் பேச்சை ட்ரோல் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது இவ்விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறி இருக்கின்றது. 

Advertisement

Advertisement

Advertisement