சுதா கொங்கராவின் அடுத்த படம் – கதாநாயகன் இவர்தான்!

221

நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் வெற்றி மூலம் கவனம் பெற்ற சுதா கொங்கரா, நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோர்க்கு கதை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது அவரின் அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவே கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.

இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இப் படத்துக்கு இயக்குனர் நலன் குமாரசாமி திரைக்கதை எழுத, சூர்யாவே கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.