பிரபல மாடர் அழகிகள் கொலை வழக்கில் திடீர் திருப்பம்-தொடர்ந்து கைது செய்யப்படும் நபர்கள்

161

கடந்த சில மாதங்களாக தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் பல்வேறு காரணங்களால் திடீரென இறப்புக்குள்ளாகி வருகின்றார்கள் . அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு கேரளாவில் நடத்த அழகிப் போட்டியில் பங்கேற்று முதலிடத்தைப் பெற்றவர் ஆன்சி கபீர், இவருக்கு 26 வயது ஆகும்.

இப் போட்டியில் இரண்டாம் இடத்தை அஞ்சனா சாஜன் பெற்றுக் கொண்டார். இந்தப் போட்டியைத் தொடர்ந்து இருவரும் நெருங்கிய நண்பர்களானதோடு அவ்வப் போது மாடலிங் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது உண்டு. அந்த வகையில், ஆன்சி, அஞ்சனா உட்பட 4 பேர் திருவனந்தபுரத்தில் நடந்த மாடலிங் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

அத்தோடு கடந்த நவம்பர் 1 ஆம் தேதி, அதிகாலை ஒரு மணியளவில் இவர்கள் எர்ணாகுளம் புறவழி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, ஏற்பட்ட விபத்தில் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து குறித்து எர்ணாகுளம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இவ்விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் புகார்கள் கிளம்பின.

விசாரணையில் விபத்திற்கு முன், அந்த இரு பெண்களின் காரை சந்தேகப்படும் வகையில் ஒரு ‘ஆடி’ கார் பின்தொடர்ந்தது தெரியவந்தது.அத்தோடு விருந்து நடைபெற்ற ஓட்டல் சிசிடிவி காட்சிகள் அளிக்கப்பட்டிருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இது தொடர்பாக ஓட்டல் அதிபர் ராய் வயலட் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மாடல் அழகிகளின் காரை பின் தொடர்ந்த ஆடி கார் மர்ம நபரை போலீசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில்; விருந்தில் பங்கேற்ற இவர், அந்த இளம் பெண்கள் இருவருக்கும் போதைப்பொருட்களை கொடுத்துள்ளதோடு அவர்கள் வாங்க மறுத்துவிட்டு இரண்டு அழகிகளும் காரில் சென்று விட்டனர். இதனால் கடுப்பான தங்கச்சன் ‘அவர்களை காரில் பின் தொடர்ந்துள்ளார். பின்னர் விபத்து ஏற்படும் வகையில் அவர்கள் சென்ற கரை சேஸ் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தவறான நோக்கில் பெண்களை பின் தொடர்தல் மற்றும் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அலட்சியமாக நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சைஜு தங்கச்சனை கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.