• Apr 16 2024

'விடுதலை' படப்பிடிப்பில் நடந்த திடீர் மரணம்: தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான இயக்கத்தால் முத்திரை பதிப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெறுபவை.எனினும்  தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் உருவாகி வருகின்றது. இவ்வாறுஇருக்கையில்  இதன் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு தனுஷின் 'அசுரன்' படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது நடிகர் சூரியை ஹீரோவாக்கி 'விடுதலை' என்ற படத்தை இயக்கி வருகின்றார் வெற்றிமாறன். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். அத்தோடு இந்த படத்திற்காக நடிகர் சூரி சிக்ஸ்பேக் எல்லாம் வைத்து வெறித்தனமாக தயாராகிவுள்ளார்.

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற ‘விசாரணை’ படம் போலவே இந்த படத்தையும் வித்தியாசமாக இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப்படம் தயாராகி வருகிறது. எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில்  சென்னை கேளம்பாக்கத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்த போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக சுரேஷ் என்பவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. அத்தோடு சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வந்த சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் கயிறு அறுந்து விழுந்ததில் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து 'விடுதலை' பட தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’விடுதலை’ படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் காலமானது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு இப் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சியை ஒன்று எடுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் காலமானார் என்றும் அறிவித்துள்ளது.

அத்தோடு  படப்பிடிப்பில் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக ஆம்புலன்ஸ் உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தும் சுரேஷை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.மேலும்  அவர் எங்களை விட்டுச் சென்றது மிகப்பெரிய இழப்பு. இந்த சம்பவம் எங்களது இதயங்களில் மாறாத வலியாக இன்று இருக்கும். மறைந்த சுரேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement