• May 29 2023

திடீரென வீட்டிலிருந்து காணாமல் போன சுடர்- செய்வதறியாது திகைக்கும் அபி- இனி நடக்கப்போவது என்ன?

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து எனனைத் தொடும்.இந்த சீரியலில் வர வர அபயும் வெற்றியும் மோதிக் கொள்வது அதிகரித்துக் கொண்டே போகின்றது.

அபி வருணைக் காதலித்து திருமணம் செய்து விட்டதாக எண்ணி கண்மணியை வெற்றி கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டார். கண்மணி வெற்றி அடைந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பல சூழ்ச்சிகளையும் செய்து வருகின்றார் கண்மணியின் சூழ்ச்சி தெரியாமல் வெற்றியும் அவரது குடும்பமும் சிக்கி விட்டது.

இதனால் அபி பற்றிய உண்மை எப்போது வெற்றிக்கு தெரிய வரும் எப்போது இருவரும் சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். கண்மணியில் சூழ்ச்சியில் வெற்றி விழுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இப்படியான நிலையில் வெற்றியுடன் பேசக் கூடாது என்று சொன்ன காரணத்தால் சுடர் வீட்டில் யாருக்கும் தெரியாடல் தனியாக வெற்றியைத் தேடிச் செல்கின்றார். இதனால் அபி பதறிப்போய் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement