• Apr 19 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு இப்படியொரு நோயா...அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ீனசின்னத்திரை ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அதில் சீரியல்களும் ஒன்று, அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த தொடர் அண்ணன்-தம்பி பாசத்தை அடிப்படையாகக் கொண்டு கூட்டு குடும்பத்தை மையமாக கொண்டும் இந்த கதை ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீரியல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சீரியலை சின்ன அண்ணியாக மீனா ரோலில் நடிப்பவர் நடிகை ஹேமா ராஜ்குமார். இவர் இதற்கு முன்பு சின்னதம்பி சீரியலில் செவ்வந்தி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். அதே போன்று ஒருசில படங்களில் தோன்றியுள்ளார்.

நடிகை ஹேமா சீரியல் மட்டுமன்றி தனியார் யூடியூப் சேனல் ஒன்று உருவாக்கி அதில் தன்னுடைய வழக்கமான நிகழ்வுகளை பதிவு செய்து ஏராளமான ரசிகர்களை தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் நேற்றைய தினம் ஹேமா எனக்கு ஆப்ரேஷன் என்ற டைட்டிலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன ஆனது ஹேமாவிற்கு என்று பதறிப் போனார்கள்.

பின்னர் அதனை கிளிக் செய்து பார்த்தபோது ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனது, ரெஸ்ட் எடுத்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஹேமாவிற்கு என்ன ஆச்சு திடீரென்று என்ற கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

இந்த ஆப்ரேஷன் பற்றி ரசிகர்களிடம் ஷேர் செய்த ஹேமா, சில மாதங்களாக தனது கழுத்திற்கு கீழான பகுதியில் நான்கு சென்டிமீட்டர் அளவில் கட்டி ஒன்று இருந்துள்ளது. இது தொடர்பாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் இது கான்சர் கட்டியாக மாறிவிடும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனால் தூக்கம் இல்லாமல் தவித்த நான் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து கட்டியை நீக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக செய்யப்பட்ட ஆபரேஷன் தான் இது என்றும், இந்த ஆபரேஷனில் தனது தங்கை கூட இருந்து கவனித்துக் கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் தங்கள் உடல் பகுதியில் இருக்கும் கட்டிகளை அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும் உடனே மருத்துவரைப் பார்ப்பது நல்லது என்றும் அறிவுரை கூறியுள்ளார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement