• Apr 16 2024

முக்கிய இடங்களில் வசூலில் பின் தங்கிய வாரிசு- அடடே இத்தனை கோடி நஷ்டமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவான வாரிசு படம் கடந்த 11 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.

தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் மற்றும் தில் ராஜு தயாரிப்பில் இப்படம் உருவானது.

ரூ. 60 கோடி பட்ஜெட்டில் முதலில் தொடங்கப்பட்ட இப்படம் முடிவதற்குள் ரூ. 80 கோடியை எட்டிவிட்டதாம்.ஆனால் படத்திற்கான வியாபாரம் எந்த குறையும் இல்லாமல் விஜய்யின் மார்க்கெட்டிற்கு அமோகமாக விற்கப்பட்டது.தற்போது என்னவென்றால் விஜய்யின் வாரிசு திரைப்படம் அமெரிக்காவில் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. 


அங்கு 1.6 மில்லியன் வரை வசூலித்தால் தான் லாபமாம், ஆனால் இதுவரை 1.1 மில்லியன் தான் வசூலித்துள்ளதாம்.வரும் நாட்களில் சாதாரண வசூல் கூட வராத என்கின்றனர்.அதேபோல் Gulf போன்ற இடங்களிலும் துணிவை விட குறைந்த வசூலை தான் வாரிசு பெற்றுள்ளதாம்.

இந்த நிலையில் வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் 2ஆவது படமான தளபதி67 படத்தில் விஜய் 46வயது நிரம்பிய டீக்கடைக்காரராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement