• Apr 01 2023

கல்யாணத்தில் முடிந்த காதல்.. ரஜினிகாந்த் வீட்டில் இன்று நடக்கவுள்ள விஷேசம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது 'ஜெயிலர்' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் முடித்த கையோடு தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' என்ற படத்தில் நடிக்கவிருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது 7 நாட்கள் இப்படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கியுள்ள ரஜினிகாந்திற்கு ரூ. 25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்திற்கு சௌந்தர்யா என்னும் இன்னொரு மகளும் உண்டு. மகள்கள் இருவருமே திருமணம் ஆகி செட்டில் ஆகி விட்டார்கள்.


ஆனால் ஐஸ்வர்யா தனுஷை விவாகரத்து செய்து தற்போது தனது பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் ரஜினிகாந்த் வீட்டில் இன்றைய தினம் ஒரு விஷேசம் நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது ரஜினிகாந்த் லதா என்பவரை காதலித்து வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 1981-ஆம் ஆண்டு இவர்களது காதல் திருமணத்தில் முடிந்தது.


இந்நிலையில் இன்றைய தினம் ரஜினிகாந்த் - லதா ஜோடிக்கு திருமணம் நாளாம். இதனை அவர்களது வீட்டில் கொண்டாட உள்ளனர்.  இதனால் ரசிகர்கள் பலரும், ரஜினிகாந்த் மற்றும் லதாவிற்கு தங்களுடைய திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement