• Mar 29 2024

சன்னிலியோனுடன் மோதவுள்ள த்ரிஷா... எதிர்பார்ப்பில் தென்னிந்திய ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவவைப் பொறுத்தவரையில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக 2022-ஆம் ஆண்டு பல்வேறு பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்கள் கிடைத்தன. இதனால் கோலிவுட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு சக்சஸ்புல் ஆண்டாகவே இருந்தது என்று கூறலாம்.

மேலும் இது இந்த ஆண்டின் கடைசி வாரம் இது என்பதால், இந்த வார இறுதியில் திரையரங்கில் 8 படங்களும், ஓடிடி-யில் 5 தமிழ் படங்களும் ரிலீசாக உள்ளன. அவை என்ன என்பதை இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

அந்தவகையில் தமிழ் சினிமாவில் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி திரிஷாவின் 'ராங்கி', சன்னி லியோன் நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்', ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா' மற்றும் கோவை சரளா நடித்துள்ள 'செம்பி' என கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட 4 படங்கள் ரிலீசாக இருக்கின்றன.


இவை மட்டுமல்லாது 'காலேஞ் ரோடு, அருவா சண்ட, சகுந்தலாவின் காதலன், கடைசி காதல் கதை' ஆகிய நான்கு சிறு பட்ஜெட் படங்களும் திரைக்கு வர உள்ளன. அத்தோடு ஓடிடி-யை பொறுத்தவரை இந்த வாரம் 5 தமிழ் படங்கள் ரிலீசாக உள்ளன. அதில் நான்கு படங்கள் தியேட்டர் ரிலீசுக்கு பிந்தைய வெளியீடாகவும், ஒரே ஒரு படம் மட்டும் நேரடி ஓடிடி வெளியீடாகவும் ரிலீசாக உள்ளன. 


அதாவது நயன்தாராவின் கோல்டு, விஜய் சேதுபதி நடித்துள்ள டிஎஸ்பி, விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி, அதர்வாவின் பட்டத்து அரசன் ஆகிய நான்கு படங்களும் தியேட்டர் ரிலீசுக்கு பிந்தைய வெளியீடுகள் ஆகும். இதில் கட்டா குஸ்தி ஜனவரி 1-ஆம் தேதியும், கோல்டு டிசம்பர் 29-ஆம் தேதியும் மற்ற படங்கள் வருகிற டிசம்பர் 30-ஆம் தேதியும் ரிலீசாக உள்ளன.

இதில் கோல்டு படமானது அமேசான் பிரைமிலும், டிஎஸ்பி படம் நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட்டிலும், கட்டா குஸ்தி மற்றும் பட்டத்து அரசன் நெட்பிளிக்ஸிலும் வெளியாக உள்ளன. அதேபோல் நேரடி ஓடிடி வெளியீடாக ரிலீஸ் ஆக உள்ள 'உடன்பால்' என்ற திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.


எது எவ்வாறாயினும் த்ரிஷாவின் படத்தோடு சன்னிலியோனின் படம் மோதவிருப்பது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement