• Mar 28 2023

ரசிகர் கேட்ட கேள்விக்கு அதிரடி பதிலளித்து அலறவிட்ட சவுண்டு சரோஜா..அப்பிடி என்னதான் நடந்துச்சு..!

Aishu / 1 month ago

Advertisement

Listen News!

 நான் சோத்துக்கு வழி இல்லாமல் இருக்கிறேன் என்று சொல்லவே இல்லை என நடிகை ஐஸ்வர்யா அதிரடியாக பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா, தெலுங்கு படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான ராசுகுட்டி படத்தில் நடித்து பிரபலமானார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து மில் தொழிலாளி, தையல்காரன், மீரா, உள்ளே வெளியே, காசி,பஞ்சதந்திரம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, ஆறு, பரமசிவம், பிரியசகி, பழனி, அபியும் நானும் என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.



நடிகை லட்சுமியின் மகள் என்ற பெயருடன் சினிமாவில் நுழைந்தாலும், தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனது திறமையை நிரூபித்து தனக்கு என ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். அத்தோடு சூர்யா நடித்த ஆறு படத்தில்,சவுண்டு சரோஜா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அலறவிட்டார்

இந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை புகழின் உச்சிக்கு சென்ற இவர், சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில்,சமையல், அழகு டிப்ஸ், சோப்பு தயாரிப்பு போன்றவற்றை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு நேரடியாக அவர் பாணியில் பதில் அளித்துள்ளார்.



அதில் ஒரு ரசிகர், மேம் சவுண்டு சரோஜா மாதிரி வாங்க என்று கூற,17 வருஷத்திற்கு முன்னாடி ஒரு இயக்குநர் உருவாக்கிய கதாபாத்திரம் அது, இப்பவும் அதே மாதிரி வந்தா, அது பேரு க்ரியேட்டிவிட்டி கிடையாது, அது காப்பி, எனக்கு காப்பி அடிப்பது பிடிக்காது என்று அதிரடியாக பதில் அளித்தார்.

சோத்துக்கு வழி இல்லை, கஷ்டப்படுகிறேன் என்று சொன்னது உண்மையா? என ஒரு ரசிகர் கேள்வி கேட்க, நான் அந்த யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சோத்துக்கு வழி இல்லை என்று நான் சொல்லவே இல்ல இப்படி எல்லாம் தலைப்பு போட்டால் தான் மக்கள் அதை படிப்பார்கள், மக்கள் படிக்க படிக்க வியூவர்ஸ் அதிகரிக்கும் அப்போத்தான் அவங்களுக்கு காசு வரும்.



நான் யோக பயிற்சியினால் இப்படி சாப்பிடுகிறேன் என்று சொன்னேன், ஆனால்,அவர்கள் காசு இல்லாமல் கஷ்டப்படுகிறேன் என்று சொல்லிவிட்டார்கள். அந்த மாதிரி நான் கஷ்டப்பட்டு இருந்தால் ரோட்டுலத்தான் இருந்து இருப்பேன். என் வாழ்க்கைக்கு தேவையானதை சம்பாதித்துக்கொள்ள எனக்கும் தெரியும் என்றார்.


Advertisement

Advertisement

Advertisement