சூப்பர் சிங்கர் பாடகி மாளவிகாவிற்கு விரைவில் திருமணம்- அவரே பதிவிட்ட புகைப்படம்

290

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமான நிறைய கலைஞர்களில் மாளவிகா சுந்தரும் ஒருவர். இவரது பாடல்களுக்கு என்று எப்போதும் ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கும்.

தமிழில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்திய மாளவிகா, ஹிந்தியிலும் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இறுதி சுற்று வரை வந்தார்.

இந்த நிலையில், மாளவிகா ஒரு சந்தோஷமான செய்தி வெளியிட்டுள்ளார். அதாவது, அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறதாம். தனது வருங்கால துணைவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அவரே இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார்.