19 திரைப்பிரபலங்கள் வெளியிட்ட சோனியா அகர்வாலின் பட பர்ஸ்ட் லுக்

151

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற தொடர் வெற்றிப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதைக் கொள்ளைகொண்டவர் தான் நடிகை சோனியா அகர்வால்.

இவர் முன்னணி நடிகராக இருந்த போதே பிரபல இயக்குனரும் நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆரம்பத்தில் பெற்றோர் சம்மதத்துடன், அழகாக துவங்கிய இவர்களது காதல் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைக்க வில்லை. 3 வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்தது.

எனினும் திருமணத்திற்கு பின் படவாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் சில குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார் சோனியா அகர்வால்.

இந்நிலையில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா இணைந்து நடித்துள்ள படம் கிராண்மா. மலையாளப் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார்.

மேலும் குழந்தை நட்சத்திரம் பவுர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிஎம்ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர். ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.

அத்தோடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சோனியா அகர்வால், விமலாராமன், சார்மிளா, பாவனா மேனன், வரலட்சுமி சரத்குமார், ரம்யா நம்பீசன், இனியா ,சூர்யா ஜே. மேனன், ஆரதி சாஜன், லியானா லிஷாய், தீப்தி சதி, ஷிவதா , மரினா மைக்கேல் , கோகுல்சுரேஷ் , சரத் அப்பானி,ஹேம்நாத் மேனன், அன்சன் பால், மெஹ்பூல் சல்மான், முகமது ரபி என 19 திரைப் பிரபலங்கள் நேற்று வெளியிட்டனர்.

இந்நிலையில் படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே தங்களது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்கள். கதையிலும், காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட சோனியா அகர்வால், சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளாராம்.

கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வர வேண்டுமென்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகள் உருவாக்கியுள்ளது. சினிமா மீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது என்று குறிப்பிட்டார்.