• Mar 28 2023

யாரோட டைட்டில்…யாரோ எடுத்து சம்பாதிக்கிறானுக- விஜய்யின் Love Today பிரபலம் வேதனை

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் பீரதிப் ரங்கநாதன்.இப்படம் இவருக்க நல்லதொரு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தானெ இயக்கி தானே நடித்த திரைப்படம் தான் லவ்டுடே. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

 இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள்நடித்து இருந்தனர். மேலும், விமர்சன ரீதியாக லவ் டுடே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. என்னதான் இந்த படம் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டாலும் இந்த படம் OTTயில் வெளியான போது ஆண்களின் Toxic நடத்தையை ரொமாண்டிசைஸ் செய்யும் விதத்திற்காகவும், பெண்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் படியும் இருப்பதாக பலராலும் விமர்ச்சிக்கப்பட்டு வந்தது.


OTTயில் வெளியாகிய நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதையொட்டி படக்குழு வெற்றியைக்கொண்டாடியது. இப்படி ஒரு நிலையில் லவ் டுடே படக்குழு ஒரு விஜய்யின் லவ் டுடே படத்தின் இயக்குநர் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘ தாமதமான பதிவு… ஆனால் தாங்கமுடியாத பதிவு…லவ் டுடே 100 டே சிறப்பாக கொண்டாடினார்கள்…யூ டூபில் கிளிப்பிங்ஸ் பார்த்தேன் .

என் டைட்டில்…ஒரு மரியாதைக்கு கூட கூப்பிடல ..நன்றி சொல்லல.. ஊரே திட்னதுக்கப்புறம் ட்விட்டர் ல தேங்க்ஸ்…நல்லா வருவீங்க… சார்.. யாரோட டைட்டில்…யாரோ எடுத்து சம்பாதிக்கிறானுக…நாம இன்னும் போராடிக்கிட்டு தான் இருக்கோம்.. இத்தன நாள் ஒரு சின்ன நம்பிக்கை… வருவாங்க.. வந்து பேசுவாங்கன்னு… ம் ம் ம் மனசு தங்கமுடியாம எழுதறே’ என்று வருத்தமுடன் பதிவிட்டுள்ளார்.


லவ் டுடே என்ற தலைப்பில் நடிகர் விஜய் ஏற்கனவே நடித்துவிட்டார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஹிட் அடித்தது. மேலும், விஜய்யின் சூப்பர் ஹிட் அடித்தது. கொடுத்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் விஜய்க்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும், லவ் டுடே படத்தின் தலைப்பை கொடுத்த ஆர்பி சவுத்ரி மற்றும் தளபதி விஜய்க்கு நன்றி என்று படத்தின் ஹீரோ பிரதீப் டுவீட் போட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement