• Dec 07 2022

நடிகை ஹன்சிகா திருமணம் செய்யப்போகும் சோஹைல் இந்த தொழில் தான் செய்கிறாராம்..!

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான நடிகை ஹன்சிகா தமிழில் ஜெயம் ரவி நடித்த ’எங்கேயும் காதல்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ’மாப்பிள்ளை’ ’வேலாயுதம்’ ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ’சிங்கம்-2’ ’பிரியாணி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். 

தற்போது அவர் ஆறு படங்களில் நடித்து வரும் பிஸியான நடிகையாக உள்ளார் . இந்த நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறப் போவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவரது பிசினஸ் பார்ட்னர் சோகேல் கதுரியா என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

அத்தோடு ஜெய்பூரில் வரும் டிசம்பர் 4ம் தேதி இவர்களது திருமணம் நடக்க உள்ளதாம், அதற்கான ஏற்பாடுகள் பலமாக நடந்து வருகிறது. 

இன்று காலை ஹன்சிகாவிற்கு அவரது வருங்கால கணவர் புரொபோஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டார்.அது ரசிகர்களிடத்தே வெளியாகி வைரலானது.

மும்பையில் தொழிலதிபராக இருப்பவர், ஹன்சிகா வைத்திருக்கும் கம்பெனியிலும் பார்ட்னராக இருக்கிறாராம். அத்தோடு 1985ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ஆடைகளை ஏற்றுமதி செய்யும் ஜவுளி நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ளார்.