• Apr 25 2024

நீங்களும் அப்படித் தான் இருக்கிறீர்கள்- கணவர் குறித்து ரொமான்ஸான புதிய பதிவினைப் போட்ட மகாலட்சுமி

stella / 1 year ago

Advertisement

Listen News!


90 ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக நன்கு அறியப்பட்டவர் மகாலட்சுமி. இதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார்.

தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். மேலும் கூர்கா, சஙகத்தமிழன் ஆகிய படங்களை விநியோகம் செய்துள்ளார்.


மேலும், Fatman என்ற அடையாளத்தால் அறியப்படும் ரவீந்தர், நடிகை மகாலட்சுமி ஆகியோர் சமீபத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்களிடையே ட்ரெண்டிங்காகவும் பேசப்பட்டு வந்தது.திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் தனது திருமணத்தின் 100வது நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார் ரவீந்தர். இந்நிலையில், நடிகை மகாலட்சுமி தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "வாழ்க்கை அழகாக இருக்கிறது, நீங்களும் அப்படித்தான்" என கணவர் குறித்து மகாலட்சுமி பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement