• Apr 20 2024

விஜய்க்கு ஜோடியாகும் சின்னத்திரை நடிகை... அட அது இவர்தானா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷுட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது . மேலும் இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. 


இவ்வாறு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் விஜய்யின் 68ஆவது படம் குறித்த தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதாவது லியோ படத்தினைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும் விஜய் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்டு ஆறு மாதம் பிரேக் எடுக்கப் போகிறாராம். அதாவது அரசியலுக்கு அஸ்திவாரம் போடுவதற்காக தான் இந்தத் திடீர் முடிவு எனவும் தகவல் வெளியானது. 


இதனையடுத்து இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் எனப் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். அந்தவகையில் முதலில் நடிகை திரிஷா தான் விஜய்க்கு ஜோடியாக போகிறார் என ஒரு தகவல் இணையத்தில் கசிந்தது.


ஆனால் தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் தான் நடிக்க போவதாக மற்றோர் தகவல் வந்துள்ளது. இருப்பினும் இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. பிரியா பவானி ஷங்கர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து அதன் பின்னர் தான் சினிமாவிற்குள் நுழைந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் ஒரு சின்னத்திரை நடிகை விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் தளபதி ரசிகர்களை மேலும் எதிர்பார்ப்பில் மூழ்கடிக்கச் செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement