• Apr 20 2024

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி- இது நல்லாருக்கே..!!- யாருடைய படத்தில் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் டிஎஸ்பி. இது இவருடைய 46வது படமாகும்.இந்த நிலையில் இன்றைய தினம் இப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருகின்றது.

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளதோடு விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கின்றார்.முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 


இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், "என்னைப் போலவே விஜய்சேதுபதி சினிமா நேசர்... நான் மார்லன் பிராண்டோ முன்பு மண்டியிட்டு அவரது கையில் முத்தமிடுவேன்.அப்படித்தான் இன்று விஜய்சேதுபதி என் முன் காலில் விழுந்தார். நாளை விஜய் சேதுபதி முன்பு காலில் விழு வேறொரு கலைஞன் வருவான்." என பேசினார்.

இந்நிலையில் சன் டிவியின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். முன்னதாக இயக்குநர் பொன்ராமிடம், சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி இருவரையும் வைத்து படம் எடுத்தால் யார் ஹீரோ, யார் வில்லன் என கேட்கப்பட்டது. இதற்கு விஜய் சேதுபதியோ, “நானே வில்லனா இருந்துக்கிறேன்” என கூறியுள்ளார்.


இயக்குநர் பொன்ராம் சிவகார்த்திகேயன் நடிப்பிலான வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement