தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டாக்டர், டான், பிரின்ஸ் உட்படப் பல திரைப்படங்களும் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன. அந்தவகையில் இறுதியாக வெளியான மாவீரன் திரைப்படமும் பாசிட்டிவ் விமர்சனக்களை வாரிக்குவித்து இருந்தது.
இதனைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள படம் 'அயலான்'. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக 'அயலான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வந்தது. இருப்பினும் கொரோனா லாக்டவுன் காரணமாக பலமுறை இதன் படப்பிடிப்பு தடைபட்டது. எது எவ்வாறாயினும் இந்தியாவில் உருவாகும் முதல் ஏலியன், சயின்ஸ் ஃபிக்சன் மற்றும் கிராபிக்ஸ் படமாக அயலான் இருக்கும் என படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்தவகையில் சமீபத்தில் அயலான் திரைப்படம் வரும் 2024 -ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு சோகமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்தின் உடைய வெளியீட்டுத் தேதி தள்ளிப்போக உள்ளதாக கூறப்படுகின்றது. பொங்கலுக்கு வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் சற்று ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
Listen News!