• Jun 04 2023

சிறுவயதில் மனைவி ஆர்த்தியுடன் சிவகார்த்திகேயன்... அட அப்பவே இவங்க இப்படியா...!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முக்கிய நடிகராக திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பிலும் மடோன் அஷ்வின் இயக்கத்திலும் உருவாகி வரும் படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் இடம்பெற்று வருகிறது. அதை தொடர்ந்து வெகு நாட்களாக திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் அயலான் திரைப்படமும் வெளியாகவுள்ளது.

இவ்வாறு சினிமாவில் பிசியாக வலம் வரும் சிவகார்த்திகேயனின் தனிப்பட்ட வாழ்க்கையை நோக்கின் கடந்த 2010ஆம் ஆண்டு இவர் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.


இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் சிறு வயதில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் சிறுவயதில் இருந்தே நீங்க இருவரும் நண்பர்களா எனக் கேட்டு வருகின்றனர். இதோ அந்தப் புகைப்படம்..!


Advertisement

Advertisement

Advertisement