• Apr 24 2024

ஆஸ்கார் விருது பெற்ற படத்தில் நடித்த யானையின் உயிரைக் காப்பாற்றிய சிவகார்த்திகேயன்- பலரும் அறிந்திடாத உண்மைத் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கிய ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்கிற ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய ஆவணப்படம் இதுவாகும். இஅங்கு ரகு, அம்மு என்கிற இரண்டு யானைகளை தங்களது குழந்தைகள் போல் வளர்த்து வந்த பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோரை மையமாக வைத்து தான் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது.

இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு யானைகளில் ரகு என்கிற யானை ஓசூர் அருகே கடந்த 2017-ம் ஆண்டு மீட்கப்பட்டது. தாய் யானையை பிரிந்து நாய்களிடம் கடிபட்டு ரத்தக் காயங்களுடன் சுற்றிந்திரிந்த இந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு முதுமலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது உடல்நலம் குன்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த யானை ரகுவை காப்பற்ற காஸ்ட்லியான மருந்துகள் தேவைப்பட்டு இருந்ததாம்.


அந்த சமயத்தில் இதுகுறித்த தகவல் அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், அந்த யானையின் மருத்துவ தேவைகளுக்காக உதவிக்கரம் நீட்டி இருக்கிறார். அத்தோடு பிரபல ஜோதிடன் ஷெல்வியும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தாராம். இதையடுத்து தான் படிப்படியாக உடல்நலம் தேறி இயல்புநிலைக்கு திரும்பியதாம் ரகு. இந்த தகவலை ஊட்டியை சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளியிட்டு இருக்கிறார். 


ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தில் தோன்றிய யானை ரகு, நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் உயிர்பிழைத்துள்ளதை அறிந்த ரசிகர்கள், அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement