• Apr 20 2024

மாவீரன் படத்தின் முக்கிய பணியை செய்து முடித்த சிவகார்த்திகேயன்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவர்  ஒரே மாதிரியான கதையை தேர்வு செய்து நடிக்காமல்... தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

 சாந்தி டாக்கிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே,அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில், சுனில், யோகி பாபு, சரிதா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே, முடிந்துவிட்ட நிலையில்... போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன.


 அதன்படி தற்போது இந்த படத்தின், முக்கிய பணி ஒன்று முடிந்து விட்டதாக படக்குழு தற்போது, அறிவித்துள்ளது அதன்படி சிவகார்த்திகேயன் தன்னுடைய டப்பிங் பணியை முடித்துள்ளார்.

இது குறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், உருவாக்கி உள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ளது ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் மற்ற சில பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. 


 தற்போது சிவகார்த்திகேயன் டப்பிங் ஸ்டுடியோவில் இருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. மாவீரன் படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ளார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement