ராஜா ராணி படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் கமிட்டானது சிவகார்த்திகேயன் தானாம்.-அதிர்ச்சியில் ரசிகர்கள்.

73
Maan Karate Success Meet with Sivakarthikeyan, Hansika Motwani

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கிய பல இயக்குனர்கள் காணப்படுகின்றார்கள். அப்படி தான் இயக்கிய முதல் திரைப்படத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இயக்குனர் அட்லீ. இவர் 2013ஆம் ஆண்டு ராஜா ராணி என்ற படத்தை முதன் முதலில் இயக்கியுள்ளார்.

மேலும் இந்தத் திரைப்படம் திருமண வாழ்க்கையை மையப்படுத்தி அமைந்ததால் ரசிகர்களிடையே அமோக வெற்றி பெற்றது.இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் என்பதும் தெரிந்ததே.

அதிலும் நடிகர் ஜெய் நடித்திருந்த சூர்யா எனும் கதாபாத்திரம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் ஜெய் நடித்துள்ள இந்த கதாபாத்திரத்தில், முதன் முதலில் நடிக்கவிருந்தது முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தானாம் என்று கூறப்படுகின்றது.

ஆனால் மேலும் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகி சிவகார்த்திகேயனுக்கு பதிலாக, நடிகர் ஜெய் தேர்வு செய்யப்பட்டர் என்றும் தெரிவிக்கின்றனர்.அத்தோடு அட்லீயின் முகப்புத்தகம் எனும் குறும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சதீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: