• Mar 27 2023

திடீரென சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்...இதனால் தானா..?

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன்  தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.மேலும்  இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் விரைவில் ஏ.ஆர். முருகதாஸுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார் எனும் தகவல் வெளியாகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை எவும் வெளிவரவில்லை.


விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகுமென்றும், இந்த கூட்டணி அமைவது உறுதி என்றும் சொல்லப்படுகின்றது.

இவ்வாறுஇருக்கையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் சிவகார்த்திகேயன், இப்படத்தில் நடிக்க தன்னுடைய வழக்கமான சம்பளத்தில் இருந்து ரூ. 5 கோடி குறைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதே போல் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் கூட தன்னுடைய சம்பளத்தை குறைத்துக்கொண்டு தான் இப்படத்தில் கமிட்டாகியுள்ளாராம் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement