• Oct 16 2024

ஏ.ஆர். முருகதாஸ் பிறந்தநாளில்... குட் நியூஸ் சொன்ன சிவகார்த்திகேயன்... வெளியானது சூப்பரான அப்டேட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கத்தில் உருவான 'துப்பாக்கி, கஜினி, தீனா, 7ஆம் அறிவு' போன்ற படங்களை இன்றும் நம்மால் மறக்க முடியாது.

இந்நிலையில் இன்றைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்குப் பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, தனது 23 ஆவது படம் குறித்த அறிவிப்பினையும் அப்பதியில் வெளியிட்டிருக்கின்றார்.


அதாவது அதில் "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் முருகதாஸ் சார். உங்களுடன் என்னுடைய 23-ஆவது படத்தில் இணைவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் கூறிய கதையை கேட்டபின் என்னுடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது. இந்த படம் எனக்கு எல்லா விதங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் படப்பிடிப்பை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். 


சிவகார்த்திகேயனின் இந்தப் பதிவிற்கு ஏ.ஆர்.முருகதாஸ் பதிலளிக்கையில் "மிக்க நன்றி சிவா! அடுத்த படத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி! நாம் இணைந்து சில சினிமா மாயாஜாலங்களை உருவாக்குவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement