• Sep 13 2024

சீதாராமம் திரைப்பட நடிகையுடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்- அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன்.இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூலிலும் அள்ளிக் குவித்தது.

மேலும் இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கேட்கும் அசரீரி குரலுக்காக நடிகர் விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்தார். சம்பளமே வாங்காமல் அவர் செய்த இந்த செயல் கோலிவுட் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் 'எஸ்கே 21' படத்தில் நடித்து வருகிறார் 


இந்தப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயன் இந்தப்படத்தில் இராணுவ வீரராக நடிக்கிறார். 'எஸ்கே 21' படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 'சீதா ராமம்' படத்தில் இளவரசி நூர்ஜஹானாக நடித்து தென்னிந்திய ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்த மிருணாள்,சிவகார்த்திகேயன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement