• Jun 04 2023

நடிகர் ஆன பின்பும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன்- வைரலாகும் வீடியோ- அடடே இது சூப்பர் ஹிட் ஷோவாச்சே

stella / 1 week ago

Advertisement

Listen News!


சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் தயாராகி உள்ளது. மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

சிவகார்த்திகேயன் உடன் அதிதி ஷங்கர், சுனில், சரிதா, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இப்படத்திற்கான பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள திரைப்படம் தான் எஸ்.கே.21. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இப்படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். 

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது.இப்படியான நிலையில்  சிவகார்த்திகேயன் ஒரு முறை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளராக தொகுத்து வழங்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement