Saturday, May 28, 2022

ப்ளூ சட்டை மாறன் குரலில் டான் படத்திற்கு தானே விமர்சனம் செய்த சிவகார்த்திகேயன் ..!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டிருக்கின்றார். டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சிவார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் இயக்குனர் பாண்டிராஜால் அறிமுகமானார்.

மேலும் அதைத்தொடர்ந்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ என தொடர் வெற்றிகளின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார். இந்நிலையில் கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் நூறு கோடி வசூல் செய்து பெரிய சாதனை படைத்தது.

இவ்வாறுஇருக்கையில் இவரது நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து மற்ற நடிகர்கள் போல மிமிக்ரி செய்து பேசியுள்ளார்.

அப்போது இந்த படத்திற்கு நீங்களே விமர்சனம் செய்தால் என்ன செய்வீர்கள் என கேட்க சிவகார்த்திகேயன் ப்ளூ சட்டை மாறன் குரலில் விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் எல்லா விதமான எமோஷனல் இருக்கு, ஆனா எதுக்கு இருக்குனு கேட்காதீங்க குடும்பத்தோடு போய் பார்த்து என்ஜாய் பண்ணுங்க என கூறியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்