• Apr 20 2024

மாவீரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை அதிதியுடன் பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்! வைரலாகும் வீடியோ..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமானவர்கள் திரைப்படங்களில் ஜொலிக்க முடியுமா? என்கிற கேள்வி பல வருடங்களாகவே இருந்து கொண்டிருந்த நிலையில், அதிரடியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குள் நுழைந்து ஹீரோவாக வெற்றிக்கொடி நாட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். 

இவர் தற்போது  'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஆதீன ஷங்கர் நடிக்கிறார்.

விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் 'மாவீரன்' ஷூட்டிங் ஸ்பாட்டில், நடிகை அதிதி ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வெளியாகி, ரசிகர்கள் அதனை வைரலாக்கி  வருகிறனர்.

இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இப்படத்தில் இடம்பெற்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement