• Apr 19 2024

வெளியானது முதல் ட்ரைலர்... காமெடியில் கலக்கிய சிவா...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிவா தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுள் ஒருவராக அறிமுகமாகி தற்பொழுது காமெடி கலாட்டா நிறைந்த திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து ட்ரெண்டிங்காக கலக்கி வருகிறார். இவருடைய காமெடி திறமையினால் தற்பொழுது அகில உலக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். 


இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  


இந்நிலையில் இந்த படம் வரும் 24ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. முழுக்க முழுக்க காமெடி கலாட்டா நிறைந்த படமாக உருவாகி இருப்பது ட்ரெய்லரின் மூலம் தெரிய வருகிறது.


இந்தப் படத்தில் சிவா, அஞ்சுகுரியன், மேவு ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ள நிலையில் விக்னேஷ் ஷா இயக்கியுள்ளார். இதனை அடுத்து லியோன் ஜேம்ஸ் இசையில் ஆர்தர் வில்சன் ஒலிப்பதிவில், பூபதி செல்வராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லார்ஜ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


மேலும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த டிரைலரில் உள்ள காட்சிகள் ரசிகர்கள் மனதை பெரிதளவில் கவர்ந்துள்ளது. சமீப காலங்களாக உலகம் ஸ்மார்ட் போனால் முழுகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் போனால் பல பிரச்சனைகளும் வரும் நிலையில் அதனை காமெடியாக இயக்குநர் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார். 



Advertisement

Advertisement

Advertisement