• Apr 24 2024

ஆரம்பமாகிறது சிங்கம் 4 சூட்டிங்...மீண்டும் இணையும் சூர்யா - ஹரி கூட்டணி

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சூர்யா என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். அதுமட்டுமல்லாமல் சூர்யா திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார்.


மேலும் இவர் நேருக்கு நேர், நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன்,ஏழாம் அறிவு போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.


இவரின் நடிப்புத் திறனால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் விஜய் விருதுகள் என போன்ற பல விருதுகள் வென்றுள்ளார்.மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.


இந்நிலையில் ஹரி இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு சூர்யா நடித்து வெளியான திரைப்படம் சிங்கம். இப்படத்தை தொடர்ந்து சிங்கம் 2, சிங்கம் 3 என தொடர்ச்சியாக வெளிவந்து சாதனை படைத்தது.


மீண்டும் சூர்யா - ஹரி இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் சிங்கம் 4 படத்திற்காக இவருவரும் மீண்டும் இணையப்போகிறார்களாம்.


இப்படத்தின் கதையை ஹரி தயார் செய்து வருவதாகவும், சூர்யா தன்னுடைய படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு சிங்கம் 4 படத்தில் நடிக்கப்போகிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement