• Apr 25 2024

முதன் முதலாக தன் குழந்தையின் முகத்தைக் காட்டி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பாடகர் அஜய் கிருஷ்ணா

stella / 11 months ago

Advertisement

Listen News!

 சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் அஜய் கிருஷ்ணா. இவர் உதித் நாராயணன் போலவே பாடுவதில் வல்லவர். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, மிகவும் பிரபலமாகவில்லை என்றாலும்... பின்னர் சீனியர் மற்றும் ஜூனியர் என இருதரப்புக்கும் நடைபெற்ற போட்டியின் போது, ஜூனியர் பாடகர்களுக்கு சப்போர்ட் செய்து மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் அஜய் கிருஷ்ணா தன்னுடைய ரசிகையான ஜெசி என்பவரை கடந்த ஆண்டு காதலித்து, திருமணம் செய்து கொண்ட நிலையில்... தன்னுடைய பிறந்தநாள் அன்று மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.


இதை தொடர்ந்து அஜய் கிருஷ்ணா - ஜெசி தம்பதிக்கு, பிப்ரவரி 12ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவரே தன்னுடைய சமூக வலைதளத்தில் மனைவியின் கர்ப்பகால புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தார். இதை அடுத்து ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இப்படியான நிலையில் இன்று இவர் தனது 1வது திருமண நாளைக் கொண்டாடி வருகின்றார். அதனால் தங்களுடைய குழந்தையின் முகத்தைக் காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement